திருச்சியை சேர்ந்த இரண்டு பேராசிரியர்களுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் விருது
மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் அக்டோபர் 14ந் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் பிரேம் ஆனந்த் மற்றும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி டாக்டர்.சௌந்தர்யா ஆகியோர் டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் விருதை பெற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இவ்விருது விழாவில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பாண்டியராஜன், கம்போடியா நாட்டின் அமைச்சரின் உதவியாளர் டாக்டர்.ஷிராஜ் மற்றும் சத்குரு ஜெயப்பிரகாஷ் குருஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
சமுக விஞ்ஞானிகள் பிரிவில் அதிக புத்தகங்கள் வெளியீடு, மற்றும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏற்படுத்தல், அதற்கான பயிற்சி அளித்தல் போன்றவற்றிற்காக இவ்விருவருக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது குறித்து பேராசிரியர் பிரேம் ஆனந்த் பகிர்ந்து கொள்கையில்... "மாணவர்களுக்கு கல்வி அளிப்பதோடு அவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகாட்டுதலை அளிப்பதே சிறந்த முறையாகும். பயிற்சி முழுவதுமாக இலவசமாக செய்ய வேண்டும் என்று தொடர்ந்து செய்து வருகிறோம். அதற்கான அங்கிகாரமாக கிடைத்த இவ்விருது மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. அதிலும் அப்துல்கலாமின் பேரன் கையில் கிடைக்கப்பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.இன்னும் பல மாணவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்துள்ளது" , என்றார்.
"கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ளவர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தனர். அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இலவசமாக இணைய வழியில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றோம்.
அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி அதற்கான பயிற்சி அளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் விருது கிடைத்துள்ளது.
இவ்விருது மேலும் பல மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வதற்கான ஊக்க சக்தியாக அமைந்துள்ளது" என்கிறார் டாக்டர்.சௌந்தர்யா.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn