விஜய் அரசியல் வந்ததற்காக ஏதோ ஒரு பரபரப்புக்காக இதை போட்டுள்ளார் - திருச்சி எம்பி துரை வைகோ பேட்டி.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சுரேஷ் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ.... நீட் தேர்வு விவகாரம் குறித்தும் மாநில அரசு குறித்தும் விஜய் டிவிட் செய்தது தொடர்பான கேள்விக்கு ? விஜய் நன்கு படித்தவர் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நாங்கள் இந்தியா கூட்டணியில் உள்ளோம் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ஒழிப்போம் என கூறி இருந்தோம் ராகுல் காந்தியும் இதைக் கூறியிருந்தார். நீட் தேர்வை மாநில அதிகாரத்துக்கு விட்டு விடுவோம் என சொல்லி இருந்தார்.
ஆனால் நாங்கள் வெற்றி பெறவில்லை பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் தொடர்ந்து நீட்டிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம். ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் முதல்வர் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் நீட் ரத்து குறித்து கூறியிருந்தோம் ஆனால் ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை. நாளடைவில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தோ அல்லது ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலோ தமிழ்நாட்டில் நீட் இருக்காது. இது விஜய்க்கும் தெரியும்.
ஆனால் அரசியல் வந்ததற்காக ஏதோ ஒரு பரபரப்புக்காக இதை போட்டுள்ளார். விஜய் இந்த ஆட்சியை எதிர்க்க வேண்டும் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக வேண்டும் என்பதற்காகவும் ரசிகர்கள் மற்றும் தன்னை பின் தொடர்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பரபரப்பான அரசியலை அண்ணாமலை செய்கிறாரோ அதுபோல விஜய் செய்து கொண்டு உள்ளார் என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision