திருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது எப்போது? - 5 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் மாநகராட்சி!

திருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது எப்போது? - 5 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் மாநகராட்சி!

திருச்சி திருவரம்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் முதல் பாலாஜி நகர் 7வது விஸ்தரிப்பு வரை இணைக்கும் வகையில் குவளை வாய்க்காலின் குறுக்கே இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் சிறிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 5 வருடங்களாக மாநகராட்சி நிர்வாகத்திடம் போராடி வருகின்றனர்.

Advertisement

திருவெறும்பூர் அருகேயுள்ள பிரகாஷ் நகர், நியூட்டன் நகர், எஸ் ஏ எஸ் நகர் மற்றும் மறு முனையில் உள்ள பாலாஜி நகர் 7வது விஸ்தரிப்பு ஆகியவற்றில் சுமார் 5000 குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.  இப்பகுதி மாநகராட்சியின் 63வது வார்டாக இருந்து வருகிறது. திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு இல்லாத காரணத்தால் குவளை வாய்க்காலின் இடையில் பாலமும் இல்லாத காரணத்தால் பள்ளி குழந்தைகள் மற்றும் அவசர வேலைகள் செல்பவர்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி கடந்து வருகின்றனர்.

இதற்காகத்தான் குவளை ஆற்றின் குறுக்கே சிறிய பாலம் அமைத்து தர வேண்டும் என கடந்த 5 வருடங்களாக கோரிக்கையை வைத்துள்ளனர் இப்பகுதி மக்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்.... "எங்கள் பகுதிக்கு சிறிய பாலம் அமைத்து தர வேண்டும் என கடந்த 5 வருடங்களாக கோரிக்கை மனு கொடுத்து வந்துள்ளோம். இப்பொழுது குவளை ஆற்றின் குறுக்கே கல்களை வைத்து நடந்து செல்லும் வகையில் நாங்களே உருவாக்கியுள்ளோம். இந்த சிறிய பாலம் அமைத்து தந்தால் பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர் மூன்று கிலோமீட்டர் சுற்றி வருவது தவிர்க்கப்படும், எளிதாகவும் செல்ல முடியும். இது தொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்து நேரில் வந்து பார்வையிட்டு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது எங்கள் பகுதிக்கு பாலத்திற்கான திட்ட மதிப்பீடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் கிடைத்துள்ளது.

எனவே மாநகராட்சி நிர்வாகம் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் விரைவில் பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் எனவும், கொரோனா முடிந்து பள்ளிகள் ஆரம்பிக்கும் இந்த சூழ்நிலையில் விரைந்து பாலத்தை கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்"!