பெட்டவாத்தலை பேருந்து எண்ணிக்கை குறைப்பா? இலவசப் பயணம் செய்யும் பெண்கள் திண்டாட்டம்

பெட்டவாத்தலை பேருந்து எண்ணிக்கை குறைப்பா?  இலவசப் பயணம் செய்யும் பெண்கள் திண்டாட்டம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் பெட்டவாத்தலை செல்லும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் திருச்சி நகரிலும் சுற்றுப்பகுதிகளிலும் பணிக்குச் செல்லும் பெண்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது.

இரவு 8 மணிக்கு மேல் கால அட்டவணைப்படி அரசுப் பேருந்துகள் இயங்குவதில்லை என்றும், இதனால் தனியார் பேருந்துகளை நாடிச் செல்லவேண்டிய நிலை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். கரூர் செல்லும் தனியார் பேருந்துகள் சிறிய ஊர்களில் நிற்பதில்லை என்பதால் அந்த ஊருக்குச் செல்லவேண்டிய பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்படுவதாகப் பயணிகள் கூறுகின்றனர்.

அரசின் இலவச பயணத் திட்டத்தால் பலனடைந்து வந்த பெண்கள், தற்போது தங்களது அன்றாட ஊதியத்தின் ஒரு பகுதியை போக்குவரத்துக்குக்காகச் செலவிடவேண்டி உள்ளது எந்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். தகுந்த காரணங்களோ, முறையான அறிவிப்போ இல்லாமல் அரசுப் பேருந்துகளின் இயக்கத்தைக் குறைப்பதும் நிறுத்துவதும் எந்த வகையில் நியாயம் எனவும் பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision