கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு

Jul 6, 2025 - 08:58
Jul 6, 2025 - 09:11
 0  8.1k
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவங்கப்படும் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் துவங்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 351 முகாம் நடத்தப்படும். இத்திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறும்.

தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும். அவர்கள் அன்றாட அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் 108 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 243 முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ். தன்னார்வலர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள். இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள் / சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டிணையும், விண்ணப்பத்திணையும் வழங்குவர்.

மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, 07.07.2025 முதல் தொடங்க உள்ளது. இந்த பணி நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பணிக்காக சுமார் 1000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 8
Dislike Dislike 5
Love Love 3
Funny Funny 3
Angry Angry 0
Sad Sad 3
Wow Wow 4