உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் வரும் (05.6.2023) திங்கள் கிழமை காலை 10:30 மணி அளவில்  தோகைமலை வட்டாரம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர், வேளாண்மை இணை இயக்குநர், தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் அனைவரும் கலந்து கொண்டு தொழில் நுட்ப உரை ஆற்ற உள்ளார்கள். மேலும், கருத்து காட்சி அமைக்கப்பட உள்ளது.

எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் கேட்டுக்கொள்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn