திருச்சி மாநராட்சியில் தொடர்ந்து குறைவான கோவிட் தொற்று உள்ள கோட்டம்

திருச்சி மாநராட்சியில் தொடர்ந்து  குறைவான  கோவிட் தொற்று உள்ள கோட்டம்

திருச்சி மாவட்டத்தில் தினம்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் முற்றிலும் குறைந்து வருகிறது.

ஜூலை 1 புள்ளி விவரங்களின்படி கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1200. ஜூலை 2ல் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 185. இதில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் 116 என்ற எண்ணிக்கையாக உள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் கொரானா  தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில்ஜூலை 1 அன்று பதினோரு பேரு    உயிரிழந்துள்ளனர்.அதேசமயம் ஜீலை 2ம் தேதி கொரானாவால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில்  திருச்சி மாவட்டத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மாநகராட்சியில் உள்ள அரியமங்கலம் கோட்டத்தில் இதுவரை 6243 கோவிட் தொற்றால் உள்ளனர். இதற்கு அடுத்ததாக ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 6792 பேர் தொற்று பாதித்துள்ளது. மூன்றாவதாக பொன்மலை கோட்டம் 9 ஆயிரத்து 750 பேர் கொரோனா நோய்த்தொற்று  பாதிப்புக்குளளாகியுள்ளனர். தொடர்ந்து அதிகபட்சமாக கோஅபிஷேகபுரம் கோட்டத்தில் 11 ஆயிரத்து 968 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மாநகராட்சி பகுதியில் அதிக தொற்று பாதித்த கோட்டமாக இருக்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY