கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் வசித்து வந்த பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்ற 104 வயது முதியவரிடம் நடமாடும் தேர்தல் வாக்கு சேகரிக்கும் குழுவினர் கடந்த 6 ஆம் தேதி அன்று அவரது தபால் வாக்கை வீட்டில் சென்று சேகரித்தனர்.
இந்நிலையில் தேர்தல் நடைபெறும் முன்னரே முதியவர் சுப்பையா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.
Comments