தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஜகதீஷ் – எழிலரசி தம்பதியினரின் குழந்தை பாரதிக்கு முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தையைக் காப்பாற்றுவதற்காக குழந்தையின் உடலில் மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மரபணு ஊசி செலுத்தினால் மட்டுமே குழந்தை இறப்பை தடுக்க முடியும் எனவும் அமெரிக்காவில் கிடைக்கும் ஊசி மருந்து (ஸோல்ஜென்ஸ்மா) விலை மதிப்பில் இந்திய மதிப்பு 16 கோடி ரூபாய் எனவும் கூறியுள்ளனர். தன்னுடைய குழந்தையை காப்பதற்காக இந்த ஊசி போட வேண்டிய நிலையில் பெற்றோர்கள் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் நிதி உதவி திரட்ட முயன்று வருகின்றன. தற்போது சமூகவலைதளங்கள் மூலம் 10 கோடி ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.


இன்னும் ஆறு கோடி கிடைக்கும் பட்சத்தில் குழந்தைக்கான தடுப்பூசியை வாங்க இயலும். இதுவரை உதவியது போல் பொதுமக்கள் இந்த ஆறு கோடி கிடைக்க உதவ வேண்டும். பொதுமக்கள் செய்யும் ஒரு சிறு உதவியும் எங்கள் குழந்தையை காப்பாற்ற உதவிடும் என்கிறார் குழந்தையின் தந்தை ஜெகதீஷ்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments