துறையூர் அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த பல்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து.இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த பெண் மீது மோதியது.அதிர்ஷ்டவசமாக பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர்.சரவணன் இவரது மனைவி செந்தில் வடிவு நேற்று மாலை செந்தில் வடிவு கடைவீதி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது அரியலூரில் இருந்து கேரளாவை நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற பல்கர் லாரி நாகலாபுரம் பகுதியில் காவல்துறையினால் வேகத்தடைக்காக வைக்கப்பட்ட பேரிக்காடை கடக்க முயலும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
இதில் எதிரே வந்த செந்தில் வடிவு மீது மோதியதில் காலில் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார்.சம்பவம் அறிந்த துறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த செந்தில் வடிவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கவிழ்ந்து இருந்த வாகனத்தை சீர் செய்தனர்.
இதுகுறித்து துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் லாரியை ஓட்டி வந்தது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த மாரி என்பவரின் மகன் குமார் என்பவரை கைது செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments