திருச்சி காந்தி மார்க்கெட்டில் அரை கிலோ அளவுடைய கொத்தமல்லி ஒரு கட்டு மொத்த விற்பனையில் 70 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கொத்தமல்லி கட்டு தற்போது விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக தேனி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொத்தமல்லி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.
சில்லரை விற்பனையில் ஒரு கட்டு கொத்தமல்லி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பத்து ரூபாய்க்கு கொத்தமல்லி வாங்கும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments