திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகர அதிமுக செயலாளரை ஆபாச வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நகராட்சி ஊழியர் மீது துவாக்குடி போலீஸ் சார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

அப்படி துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பதற்காக அதிமுக நகர செயலாளர் பாண்டியன் (65)என்பவர் ஏற்படு செய்திருந்தார் அதனை மாவட்ட செயலாளர் குமார் திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் கருப்பையா ஆகியோர் திறந்து வைப்பதால் அந்தப் பகுதியில் பிளீச்சிங் பவுடர் போடும்படி நகராட்சி ஊழியரான அய்யம்பட்டி சேர்ந்த ஜார்ஜ் பாக்யராஜ் ( 43 ) என்பவரிடம் பாண்டியன் கூறியுள்ளார்.
அதற்கு எப்படி என்னிடம் பிளீச்சிங் பவுடர் போட சொல்லலாம் என கூறி பாண்டியனை ஆபாச வார்த்தையால் திட்டி கையால் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக பாண்டியன் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படு த்தி உள்ளது.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           130
130                           
 
 
 
 
 
 
 
 

 06 May, 2024
 06 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments