Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் திடீர் என்று மயங்கி விழுந்த கல்லூரி மாணவர்

திருச்சி மாவட்டத்தில் இன்று 515 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் ஒன்றாக மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜான் வெஸ்ட்லி பள்ளியில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமினை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்காக கருமண்டபம் பகுதியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார். பின்னர் அவர் பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தடியில் பகுதிக்கு வந்தபோது திடீரென மாணவன் மயங்கியதைப் பார்த்த அவர் தந்தை அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக முகாமில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக வந்து மாணவனுக்கு ரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதனை செய்தனர். மேலும் அவருக்கு தண்ணீர் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா மற்றும் மருத்துவர்கள் மாணவனை பரிசோதித்தனர். அதில் மாணவனின் உடல்நிலை மாற்றங்கள் ஏதாவது தென்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.

அதற்கு அந்த மாணவர் நீண்ட நேரம் காத்திருந்ததாலும், தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இருந்த பயன் காரணமாகவே எனக்கு மயக்கம் வந்ததாக கூறினார். இதையடுத்து மருத்துவர்கள் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் அந்த மாணவனை தந்தையோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மாணவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *