Wednesday, September 24, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் செப்.27 மாணவ – மாணவியருக்கான சைக்கிள் போட்டி நடைபெறுகிறது

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மாணவ, மாணவியர்களுக்கான மிதிவண்டிப் போட்டி 2025 நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தகவல்.
முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் 27.09.2025 அன்று காலை 6.30 மணிக்கு மாணவ, மாணவியர்களுக்கான அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் பின்வரும் மூன்று பிரிவுகளில் அண்ணா விளையாட்டரங்கின் சுற்றுபாதையில் நடைபெறவுள்ளது.மாணவர்களுக்கு (i) 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு 15 கி.மீ. (01.01.2013 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) (ii) 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 20 கி.மீ (01.01.2011 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) (iii) 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு 20 கி.மீ (01.01.2009 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்). மாணவியர்களுக்கு (i) 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு 10 கி.மீ (01.01.2013 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) (ii) 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 15 கி.மீ (01.01.2011 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) (iii) 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு 15 கி.மீ (01.01.2009 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்). போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு காசோலையாக வழங்கப்படவுள்ளது.
முதல் பரிசு – ரூ.5000.00, இரண்டாம் பரிசு – ரூ.3000.00, மூன்றாம் பரிசு – ரூ.2000.00, 4 முதல் 10 இடங்களில் வரும் 7 நபர்களுக்கு ரூ.250.00 பரிசுத் தொகை, போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவ/மாணவியர்கள் தங்கள் சொந்த செலவில் சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும், சாதாரண மிதி வண்டியாக இருத்தல் வேண்டும் (இரண்டு பிரேக்குகளுடன்), சாதாரண கைப்பிடி (Handle Bar) கொண்ட மிதிவண்டியாக இருத்தல் வேண்டும், அகலமான கிராங்க் (Gear) பொருத்தப்பட்ட மிதிவண்டிகளை பயன்படுத்துதல் கூடாது, மிதிவண்டி போட்டியில் நேரும் எதிர்பாரா விபத்துகளுக்கும் தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்குபெறும் மாணவ/மாணவியர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும், முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் மாணவ/ மாணவியர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். பரிசுத் தொகை வெற்றி பெற்றவர்களின் வங்கி கணக்கில் NEFT மூலம் வழங்க உள்ளதால் வங்கி புத்தக நகலுடன் வருகை தர வேண்டும். மாணவ/மாணவியர்கள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அண்ணா விளையாட்டரங்கத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழுடன் வருகைதர வேண்டும். வயது சான்றிதழ் இல்லாதவர்கள் போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி தொலைபேசி எண். 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்
வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *