திருச்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரின் பிரதான சாலையாக உள்ள சரவணன் நினைவுத்தூபி அருகிலுள்ள சாலையில் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. இந்தப் பகுதியில் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். தொடர்ந்து இந்த அபாயகரமான பள்ளத்தை பெரிய கற்கள் மற்றும் மரக்கிளைகளை கொண்டு இந்த பள்ளத்தை மூடி உள்ளனர். அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் இச்சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தும் அந்த பள்ளத்தை மணல் கொண்டு மூடாமல் பெரிய கற்கள் மற்றும் மரக்கிளைகளை கொண்டு வைத்திருப்பது வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரவு நேரங்களில் இப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் இந்த தடுப்புகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலையும் உள்ளது.
உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் அந்த பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என வாகன வகை ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments