திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூர் பூங்கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி இவரது மகன் விக்னேஷ் (34) பிரபல ரவுடி. இந்த நிலையில் விக்னேஷ் ஆலத்தூர் பகுதியில் அருவாளுடன் சுற்றி திரிவதாக திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற பொழுது போலீஸ் அரை கண்டதும் விக்னேஷ் தப்பி ஓடி உள்ளான் அப்பொழுது கீழே தடுமாறி விழுந்ததின் விக்னேஷின் இடது கால் முறிந்தது. பின்னர் அவனை கைது செய்ததோடு அவனிடமிருந்து அறிவாலை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு திருச்சி அரசு மருத்துவமனையில் விக்னேஷை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments