Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நடிகர் விஜய்யின் முகத்தை உடலில் டாட்டூவாக வரைந்த ரசிகர்

நட்சத்திர நடிகரும், இளைய தளபதி என அழைக்கப்படுபவருமான திரைப்பட நடிகர் விஜயின் பிறந்தநாள் வருகிற 22ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாடுவதும், நலத்திட்டங்கள் வழங்கியும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே சேலத்தைச் சேர்ந்த விஜய்யின் தீவிர ரசிகரான ராஜ்பாரதி என்பவர் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர், விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக திருச்சியில் பிரபல டாட்டூஸ் டிசைனரின் கைவண்ணத்தில் தனது முதுகில் நடிகர் விஜய்யின் முகத்தினை மிகப்பெரிய அளவில் பச்சை குத்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

இந்த டாட்டூ வரைவதற்கு 16 மணி நேரம் எடுத்துக்கொண்டதாக கூறும் டாட்டு டிசைனர் இந்த டாட்டூவை வரைந்துக் கொண்டதன் மூலம் நிச்சயம் விஜய்யை நேரில் சந்திக்கும் நீண்டநாள் கனவும் நனவாகக்கூடும் என்று நம்பிக்கையுடன், பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர் நடிகர் விஜய்யின் இந்த இரு ரசிகர்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…  https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…  https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *