திருச்சி ஜீயபுரம் அருகே காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது- 3 பேர் உயிர் தப்பினர்!

திருச்சி ஜீயபுரம் அருகே காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது- 3 பேர் உயிர் தப்பினர்!

Advertisement

திருச்சி கொட்டப்பட்டுவைச் சேர்ந்தவா் குழந்தைவேலு(38). தையல் தொழிலாளியான இவா், மனைவி மாலதி (33), மகன் ஸ்ரீவா்ஷன் (11) ஆகியோருடன் காரில் ஈரோட்டுக்குச் சென்று விட்டு, துணிகளை கொள்முதல் செய்து நேற்றிரவு இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஜீயபுரம் அருகிலுள்ள பழூா் பகுதியில் காா் வந்த போது என்ஜினில் புகை வெளியேறியது. இதில் காரை நிறுத்தி விட்டு, மூவரும் வெளியேறினா். சிறிது நேரத்தில் காரில் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு உருளை பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் காா் தீப்பற்றி எரிந்தது.

Advertisement

தகவலறிந்த திருச்சி தீயணைப்பு மெல்கியூ ராஜ் தலைமையில் வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனா். உரிய நேரத்தில் காரிலிருந்து மூவரும் வெளியேறியதால், அவா்கள் அதிா்ஷடவசமாக உயிா் தப்பினா்.