திருச்சி நீதிமன்றம் வாயிலுக்கு முன்னதாக நடுரோட்டில் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவர்மீது பரவிய தீயை அணைக்க மணல் எடுத்து வீசினர். உடல் பாதி எரிந்த நிலையில் அவரை பார்த்து பொதுமக்கள் அவரை திட்டினர். கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி உள்ளனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சி OFT அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சேகரன் வயது(58 ). திருச்சி பழைய தஞ்சாவூர் ரோடு மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.
 பஜாஜ் நிறுவனத்தில் 2019 டிசம்பர் மாதத்தில் 7 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். மாதம் 20,810 தவணை தொகையை செலுத்தி வருகிறார். இந்த நிலையில்  தவணை செலுத்துவதில் காலதாமனாதால் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வீட்டிற்க்கு வந்து மிரடியும், தகாத வார்த்தையில் திட்டியதாக காவல்துறையிடம் தகவல் கொடுத்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளாகி சேகர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

தற்போது ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 80 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சேகரன் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்
 நீதிமன்றத்துக்கு முன்னதாக பட்டப்பகலில் திடீரென ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பயத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.
நீதிமன்றத்துக்கு முன்னதாக பட்டப்பகலில் திடீரென ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பயத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.
 
 26 Oct, 2025
26 Oct, 2025                           140
140                           
 
 01 February, 2022
 01 February, 2022

Comments