திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள பனையபுரத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் சாய்ந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அப்படி சார்ந்து உள்ள நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயலில் ஏராளமான நெல்மணிகள் கொட்டி விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் விவசாயம் தாங்கள் விவசாயம் செய்வதற்கு செய்த செலவு பணத்தைக் கூட எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி ஆனது இப்படி யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இயற்கை செய்த சதியால் விளை நிலங்களில் நெல் மணிகள் கொட்டி வீணானது பல இடங்களில் நெல்மணிகள் முளைத்து உள்ளது.
இப்படி வீணான நெல் மணிகளால் விவசாயிகள் குறுவை அறுவடை செய்தபின் மீண்டும் சம்பா பயிர் சாகுபடி செய்யும் பொழுது இந்த வயலில் கொட்டிய நெல் மணிகள் முளைத்து சம்பா நெற்பயிர் சாகுபடிக்கு இடையூறை ஏற்படுத்தும். இதனால் அதனை பறித்து களைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்கு விவசாயிகளுக்கு கூடுதல் செலவும் அதிகமாகும்.
ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில் இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாகும்.
என்ன செய்வாதன விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் எங்கிருந்தோ புறாக்கள் கூட்டம் கூட்டமாக பல ஆயிரக்கணக்கில் ஒன்றாக வந்து அறுவடை செய்ய முடியாமல் வயல்களில் சாய்ந்து போனநெல்மணிகளையும் மேலும் அறுபடை செய்து வயலில் கொட்டிய நெல்மணிகளையும் சாப்பிடுவதற்காக கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகிறது.
இதனை பார்க்கும் விவசாயிகள் இவ்வளவு புறாக்கள் எங்கிருந்தது எப்படி இங்கு வந்தது.
இயற்கை செய்த சதியால் சேதமடைந்த நெல்மணிகளை சாப்பிடுவதற்காக இந்த புறாக்கள் வந்ததா அல்லது புறாக்களின் பசியை போக்குவதற்காக இயற்கை சதி செய்து விவசாயிகளின் விலை நிலங்களை நெற்பயிர்களை சேதத்தை ஏற்படுத்தியதா? வயலில் கொட்டி வீணாக நெல் மணிகளை புறாக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிடுவது மகிழ்ச்சியாகவும் வியப்பாக உள்ளது.
விவசாயி தங்களது விளைநிலங்களில் விளைந்த நெல்மணிகளை பலர் சாப்பிடுவதற்கான அரிசி சேற்று வயலில் கொட்டி சேற்றில் வீணான நெல்மணிகளை சாப்பிட வந்த புறாக்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்து வந்து உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments