மண்ணில் தோன்றிய புனிதராம், அன்பும், கருணையும் மட்டுமே தாரகமந்திரமாகக் கொண்டு இவ்வுலகில் மனிதரில் புனிதரால் வாழ்ந்துகாட்டிய இயேசுபிரான் இப்பூவுலகில் அவதரித்த தினமாகும். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி திருச்சியில் உலக மீட்பர் பசிலிக்கா, மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், குழந்தை இயேசு திருத்தலம், புனித அந்தோணியார் ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம், உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்துவ ஆலயங்களில் இன்றுஇரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.
திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்காவில் அதிபர் பங்குத்தந்தை ஆல்பர்ட் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
உலகமீட்பர் பசிலிக்கா பேராலயத்தில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, நள்ளிரவு 12:00 மணியளவில் வண்ண விளக்குகள் ஜொலிக்க இயேசுபிரான் அவதரிக்கும் நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு நற்செய்திகள் வழங்கப்பட்டன. திருப்பலி நிறைவுற்றபின்பு திருப்பலியில் கலந்துக்கொண்ட கிறிஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision






Comments