பொன்இளங்கோ 1951 ஏப்ரல் 12இல் முருகேசன் தாயம்மாள் தம்பதிக்கு மூத்த புதல்வனாக மல்லசமுத்திரம் என்ற ஊரில், அன்றைய சேலம் மாவட்டத்தில் பிறந்தார்.ஒரு தம்பியும் தங்கையும் உடன் பிறந்தவர்கள்
அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று, 1969 முதல் 1972 வரை சென்னை அரசு கேட்டரிங் கல்லூரியில் கேட்டரிங் படித்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். காமராஜர், கலைஞர், எம்ஜிஆர் போன்ற முதல்வர்களுக்கு சேவை புரிந்துள்ளார். பின்னர் திருச்சி துவாக்குடியில் உள்ள மாநில உணவுக் கலை கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார். அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
அதன் பின் தனியார் கல்லூரியில் இயக்குனராக 25 ஆண்டுகள் பணியாற்றினார்.
2021ஆம் ஆண்டு அவருடைய 50 ஆண்டுகள் விருந்தோம்பல் சேவைக்கான பாராட்டுவிழாவை மாணவர்களும் திருச்சி நகைச்சுவை மன்றமும் இணைந்து நடத்தினர்.
அவருடைய மாணவர்கள் உலகெங்கும் உள்ளார்கள் என்பதை, உலக உருண்டையை சுற்றி எங்கு கையை வைத்தாலும் எனது மாணவர்கள் இருப்பார்கள் என பெருமையுடன் சொல்வார்.
திருச்சி ட்ராவல் பெடரேசன், ஃப்ரீமேசன், நகைச்சுவை மன்றம், தண்ணீர் அமைப்பு என பல தளங்களில் தனது தடத்தைப் படைத்தார்.
தமிழ் ஆர்வம் மிக்கவர், நாடகத்துறையில் ஆர்வம் கொண்டவர்.
இறுதிவரை தனது பங்களிப்பை விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஆற்றியவர்
24.10.2025 அன்று, 12:30 மணியளவில் காலமானார்
கண்தானம் செய்துள்ளார். அதனால் அவரது கண்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். அதனால் அவரது உடல் 25.10.2025 அன்று காலை 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் (திருச்சி கருமண்டபம்) இருந்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழியனுப்பபடும்
அவருக்கு சாந்தா என்ற துணைவியாரும், பாண்டியன் மற்றும் சிவா என இரு மகன்களும் உள்ளனர். அவரது சேவை என்றும் போற்றப்படும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments