திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, ஜெம்புநாதபுரம் காவல் நிலைய போலீசாருக்கு மேல கொத்தம்பட்டி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைபுகையிலை பொருட்கள் சட்ட விரோதமாக ரகசியமாக விற்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் மேலகொத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடி உள்ளார். அங்கிருந்த மற்றொரு நபரை போலீசார் பிடித்து சோதனை செய்த போது அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 9 கிலோ எடை கொண்ட ரூபாய் 9060 மதிப்புள்ள போதை புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்டது.
மேலும் விசாரணையில் அந்த நபர் துறையூர் பாலக்கரை மேட்டுத்தெருவை சேர்ந்த தமிழரசன் (38) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குபதிந்து தமிழரசனை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments