திருச்சி நாகமங்கலம் களிமங்களம் பகுதியை சேர்ந்தவர் துரை.
குடும்ப பிரச்சினை காரணமாக அவர் நாகமங்கலத்திலேயே கடந்த 15 ஆண்டுகளாக
தனியாக தங்கி உள்ளார் என கூறப்படுகிறது .
நாகமங்கலத்தில் கிடைக்கின்ற வேலைகளை செய்து வருவார் என்றும், குடிப்பழக்கம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது
இந்நிலையில் கீழ் நாகமங்கலம் அருகே உள்ள விழுதடி கருப்பு கோவில் அருகே உள்ள நாடக மேடையில் அவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது
மர்ம நபர்கள் அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து சென்றுள்ளனர்.
சம்பவம் அறிந்த மணிகண்டம் ஆய்வாளர் கண்ணதாசன் தலைமயில் போலீசார்
சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments