திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூர் கல்லணை ரோடு அசோக்நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விக்னேஷ்குமார் (27). இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் தெற்குத்தெருவை சேர்ந்த அண்ணாதுரையின் பிரியா (27) என்பவரும் சமயபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரயில் படித்தபோது பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
இந்த விஷயம் இரு வீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோவிலில் நேற்று காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தங்களை பிரித்து விடுவார்களோ என்று நினைத்த திருமணமான காதல் ஜோடி நம்பர் 1 டோல்கேட் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோரையும் காவல் நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசார் விக்னேஷ்குமாருடன் பிரியாவை அனுப்பி வைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments