Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த ஒரு புதிய திட்டம்

No image available

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர். கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5000 மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்க்கண்ட சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடசான்று), வயது வரம்பு 25 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று, இத்திட்டத்தில்   முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும்

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (வருமான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்).

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை 23.06.2025 – 14.07.2025 க்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *