திருவெறும்பூர் அரசு ஐடிஐ எதிரே உள்ள மதுபான கடையின் பாரில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் சரக்கு விற்பனையாவதால் குடிமகன் ஒருவர் குடித்துவிட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள காந்திநகர் 4வது தெருவை சேர்ந்தவர் குமார் ( 67 ) இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள அரசு ஐடிஐ எதிர் புறம் உள்ள மதுபான கடையின் பார் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இதனால் எப்பொழுது வேண்டுமானாலும் குடிமகன்கள் தங்களுக்கு தேவையான சரக்குகளை வாங்கி அறுந்தலாம் என்ற நிலை உள்ளது.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் விற்கப்படும் சரக்குகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அப்படி வாங்கி குடித்த குமார் காதில் ரத்தம் வழிந்தும் வயிற்றில் கீரல் காயத்துடன் மர்மமான முறையில் இன்று காலை இறந்து கிடந்தார்.
இது பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments