திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஐடிஐ கல்லூரிக்கு எதிரில் உள்ள டாஸ்மாக் மற்றும் துவாக்குடி அரசு கலை கல்லூரியின் எதிரில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடை அகற்ற கோரி இந்திய மாணவர் சங்கம் டாஸ்மாக் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், துவாக்குடி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் பேச்சு வார்த்தை நடத்தி நாளை மாலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது என்ற நிலையில் முற்றுகை போராட்டமானது ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. இதில் மாவட்ட மாவட்ட தலைவர் வைரவளவன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் தோழர் GK மோகன் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் ஆமோஸ் கண்டன முழக்கமிட்டார். மாவட்ட குழு உறுப்பினர்கள் அர்ஜுன், ராஜேஷ், கிளை தோழர்கள், துளசி, மித்ரா, வினோதா, காவிய, மாதவன் பிரதீப், சுனில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments