கடந்த 1953 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி காந்தி சந்தையில் அமைக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விட்டு, அருகில் இருந்த தேசிய கொடி கம்பத்தில், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மை பணியாளர் சுமதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மண்டல தலைவர் ஜெய நிருமலா, துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர் சிவபாதம், நகர் நல அலுவலர் விஜய் சந்திரன் மற்றும் உதவி ஆணையர், சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments