திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் உணவு விடுதி முன்பு முசிறி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஸ்ரீ பால் என்பவர் தனது சொந்தமான ஸ்கூட்டரை தனியார் உணவு விடுதி முன்பு நிறுத்திவிட்டு உணவு வாங்க சென்றுள்ளார்.திடீரென அந்த ஸ்கூட்டி வாகனத்தில் வயர்கள் சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு
தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதில் டேங்கில் இருந்த பெட்ரோலும் தீ பிடித்ததால் ஸ்கூட்டர் கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதைபடுத்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற இருசக்கர வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.
காவலர் ஸ்ரீ பால் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ தடுப்பு மற்றும்மீட்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனாலும் ஸ்கூட்டர் எரிந்து கறிக்கட்டையானது.
பெரும்பாலான இடங்களில் பேட்டரி வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில் கடும் கோடை வெப்பம் காரணமாக பெட்ரோல் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என முசிறி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments