திருச்சிராப்பள்ளி ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த காவலர், ஜே.மஞ்சுநாத் (39) நேற்று (07.11.2023) மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அவருக்கு பணி நியமிக்கப்பட்டு இருந்தது. அந்த சமயம் திருச்சிராப்பள்ளி நடைமேடை 2ல் கொல்லம் முதல் சென்னை எக்மோர் வரை செல்லும் ரயில் வண்டி எதிர்பாராத விதமாக ஜே.மஞ்சுநாத் மோதியதில் சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.

ஜே.மஞ்சுநாத்தின் பூத உடல் இன்று மாலை 4 மணி அளவில் 21 குண்டு முழங்க, அரசு மரியாதையுடன் திருச்சி ஓயாமரி இடுகாட்டில் தகனம் செய்யப்படும். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் ரயில்வே பாதுகாப்பு படையில் சேர்ந்து 15 வருடம் ஆகிறது. இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரயில் சந்திப்பில் பணியில் இருந்த போது ரயில் மோதி பலியாகி உள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments