திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு சம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் புட்டுக்கு மண் சுமந்த மண் சுமந்த படலம் வைபவ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தையொட்டி சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த வைபவ நிகழ்வையொட்டி சாமி சந்திரசேகரர் வெள்ளி குதிரை வாகனத்தில் வந்தி பிராட்டியார், ஹரிவர்த்தன பாண்டியன் மற்றும் பல்லக்கில் ஆனந்தவல்லி தாயாருடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு உற்சவ மண்டபத்திலிருந்து கைலாய வாத்தியத்துடன் புறப்பட்டு மேல விபூதி பிரகாரம் வழியாக சென்று திருமஞ்சன காவிரியை அடைந்தது.

அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து ஆற்றிலிருந்து வெள்ளி மம்பட்டியால் மண் அள்ளப்பட்டு புட்டுக்கு மண் சுமந்த வைபவ நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் மகாதீபாரதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஓதுவா மூர்த்திகள் புட்டுக்கு மண் சுமந்த கதையை பக்தர்களிடம் எடுத்து சொன்னார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஆ.ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துயிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments