திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்ற சிலம்பரசன் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவரை காதலிப்பதாக கூறி கடந்த (13.04.2024) தேதி உன்னிடம் தனியாக பேச வேண்டும் என இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று டோல்கேட் மாருதி நகர் பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் காதலன் சிலம்பரசனுடன் இருந்த 5 நண்பர்களும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அதனை வீடியோவாக எடுத்து வைத்து அந்த மாணவியை மிரட்டி பலமுறை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பம் ஆகி உள்ளார். கர்ப்பமான மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்த நிலையில், தற்போது மீண்டும் அந்த மாணவியை நாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் இல்லையென்றால் உனது வீடியோவை அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் தற்பொழுது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தாயாருடன் வந்த மாணவியின் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் புகார் மனு அளித்தார்..

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி. கூறுகையில்.. நான் கல்லூரி படித்துவிட்டு சனி, ஞாயிறு மட்டும் வீட்டுக்கு வருவேன். அப்போது என்னை வந்து சந்தித்து என்னோடு பேசி பழகினான். பின்னர் ஒரு நாள் என்னை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவனும் அவனுடைய நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து என் வாழ்க்கையை வீணாக்கி விட்டனர். அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறான் என்றார்.

மேலும் அவன் அமைச்சர் மகேஸ் இடம் ஓட்டுனராக பணிபுரிவதாக என்னிடம் கூறி பழகினான் என பாதிக்கப்பட்ட மாணவி கூறினார்.. இது தொடர்பாக அமைச்சர் தரப்பிடம் கேட்டபோது இதுபோன்ற நபர் யாரும் தங்களிடம் பணி புரியவில்லை என தெரிவித்துள்ளனர். அவர் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளார் என அமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           120
120                           
 
 
 
 
 
 
 
 

 04 September, 2024
 04 September, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments