திருவெறும்பூர் அருகே உள்ளது துவாக்குடி இங்கு சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது எஸ்பிஐ வங்கி இவ் வங்கியில் சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் வங்கி கணக்குகள் வைத்துள்ளன. அது மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வங்கி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வங்கிக்குள் புகை வருவதை கண்ட வாட்ச்மேன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மேலும் துவாக்குடி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து திருவெறும்பூர், பெல், நவல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் வங்கியிலிருந்து அனைத்து கம்ப்யூட்டர்களும் எரிந்து சேதமாகிவிட்டது.

இதுகுறித்து வங்கி மேலாளர் பிரசாந்த் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றோம். சேதாரத்தின் மதிப்பு குறித்து மேலதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும் என்றனர். வங்கி ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிய வரவும் ஒவ்வொருத்தரும் தங்களது கணக்கின் நிலை தங்கள் நகை அடகு வைத்ததுடன் நிலை கண்டு அச்சம் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments