கம்போடியாவில் இருந்து தப்பி விமான மூலம் திருச்சி வந்த புதுக்கோட்டை வாலிபர் இப்ராஹீம் கூறுகையில்…. தமிழகத்தில் இருந்து 400 பேர் அங்கே வேலைக்காக விற்கப்பட்டுள்ளனர். ஆயிரம் டாலர் (1000$) ஊதியம் என்று சொல்லி இங்கு உள்ள ஏஜெண்டுகள் சீன நாட்டினரிடம் 4000 டாலருக்கு விற்பனை செய்து விடுவதாக குறிப்பிட்டார்.
அங்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை. முழுவதும் ஏமாற்றுவது மனசாட்சிக்கு விரோதமாக நடப்பது இதுபோன்ற செயல்களை செய்பவர்களை மட்டும் அடிக்காமல் துன்புறுத்தாமல் தனி அறையில் வைக்காமல் வைத்திருக்கின்றனர். மற்றவர்களை அடித்து துன்புறுத்தி மின்சாரத்தின் மூலம் ஷாக் கொடுத்து அனைத்து துன்புறுத்தல்களும் தரப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தார்.
அவர்களிடம் துப்பாக்கி வைத்து மிரட்டுவதாகவும், அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இது போன்ற ஏஜென்ட்களிடம் நம்பி ஏமாற வேண்டாம் என கூறினார் .கடந்த ஜூலை மாதம் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து நான் சென்றேன். திருச்சி தில்லைநகரில் உள்ள ஏஜென்ட் ஷாநவாஸ் கேர் கன்சல்டன்ஜி மூலம் தான் அங்கு சென்றதாகவும் இங்கு அவருக்கு உதவியாளராக முபாரக் என்பவரும், நெல்லையில் முஸ்தாக் என்பவரும் உள்ளனர். இவரிடம் யாரும் ஏமாந்து விட வேண்டாம்.
இவர்கள் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவரை திருச்சி எஸ்.டி. பி.ஐ கட்சியினர் கம்போடியாவிலிருந்து மீட்டு திருச்சிக்கு வந்து சேர்த்தாக தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments