திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், துறையூர் தனி, மண்ணச்சநல்லுார், லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில், 23 லட்சத்து 38 ஆயிரத்து 745 வாக்காளர்கள் உள்ளனர். அதில், திருச்சி கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து, 69 ஆயிரத்து 132 வாக்களர்கள், மேற்கு தொகுதியில் 2 லட்சத்து, 54 ஆயிரத்து 992 வாக்களர்கள் உள்ளனர். லால்குடி சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து, 17 ஆயிரத்து 837 வாக்களர்கள், மண்ணச்சநல்லுார் தொகுதியில் 2 லட்சத்து, 44 ஆயிரத்து 43 வாக்களர்கள், மணப்பறை தொகுதியில் 2 லட்சத்து, 89 ஆயிரத்து 512 வாக்களர்கள், ஸ்ரீரங்கம் தொகுதியில் 3 லட்சத்து, 11 ஆயிரத்து 484 வாக்களர்கள், திருவெறும்பூர் தொகுதியில் 2 லட்சத்து, 93 ஆயிரத்து 3 வாக்களர்கள், முசிறி தொகுதியில் 2 லட்சத்து, 32 ஆயிரத்து 654 வாக்களர்கள், துறையூர் தொகுதியில் 2 லட்சத்து, 44 ஆயிரத்து 43 வாக்களர்கள் உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதியும் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி 5 நகராட்சி ,14 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 401 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது .திருச்சி மாநகராட்சியில் 65 பேர் பதவிக்கு 718 பேர் போட்டியிட உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் இறுதி நாளான இன்று 384 பேர் வேட்புமனு தாக்கல். 65 வார்டு உறுப்பினர் பதவிக்கு 718 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நகராட்சியில் 676 பேரும்
பேரூராட்சியில் 896 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 2284 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments