இளம் தலைமுறையினர் வரலாற்று பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும். நாட்டின் மிகப்பெரிய அடையாளமாக திகழும், மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

திருச்சியின் அடையாளங்கள் மற்றும் பெருமைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை திருச்சி மாவட்டம் சார்பில் பாரம்பரிய நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நாளை (29.08.2024) வியாழக்கிழமை காலை 08:00 முதல் 09:30 வரை நடைபெறுகிறது. இதில் 2 கிலோமீட்டர் தூரம் வரை பாராம்பரிய நடை பயணத்தில் மெயின்காடுகேட், தெப்பக்குளம், மலைக்கோட்டை, அருங்காட்சியகம் ஆகியவை பார்வையிட்டு தற்போதைய தலைமுறையினருக்கு அவற்றின் முக்கியத்துவம் வரலாற்று சிறப்புகள் குறித்து தெரிவிக்கப்படும்.இந்த நடைபயணத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைக்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments