திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பிள்ளையார் கோவில்பட்டி அருகே நேற்று இரவு உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மலையில் இருந்து இறங்கி சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 2 1/2 வயது மதிக்க பெண் காட்டெருமை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான காட்டெருமைக்கு கால்நடை மருத்துவர் கொண்டு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு சம்பவ இடத்தின் அருகிலேயே பள்ளம் தோண்டி கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு காட்டெருமை புதைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments