திருச்சி மாநகரில் எப்பொழுதும் பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலை பகுதி ஆகும். இப்பகுதியில் அடிக்கடி இளைஞர்கள் கஞ்சா போதையிலும், மது போதையிலும் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு திடீரென நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்து இளைஞரை சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர்.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கும், மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்ததும் அருகாமையில் இருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரை மீட்டு அவசர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல்துறை விசாரணையில் வெட்டுப்பட்ட இளைஞர் திருவள்ளர்சோலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. மேலும் முதல் கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட இளைஞர் முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் லோகேஷ், சஞ்சய் ,ராம் ஆகிய நான்கு பேரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற வேடுபறி நிகழ்வு காண வந்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கத்திலிருந்து அண்ணாசாலை பகுதிக்கு நால்வரும் வந்த பொழுது மர்ம கும்பல் அவர்களை தாக்க முற்பட்டனர். இதில் முத்துக்குமார் மட்டும் மர்ம கும்பலிடம் சிக்கிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையில் முன்விரோதம் காரணமாக சில மர்ம கும்பல் எங்களை தாக்கி விட்டு சென்றதாக முத்துக்குமார் தெரிவித்தார் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவத்துக்கான காரணம் என்ன? விரோதமா அல்லது வேறு எதுவும் காரணமா?? என்று காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் இப்பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments