திருச்சி கரூர் சாலையில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டு வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement
திருச்சி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் தினர்சன். இவர் இன்று அதிகாலை கரூர் சாலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முருங்கப்பேட்டை பங்களா பேருந்து நிலையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற தட்டு ரிக்சா வண்டி மீது மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தினர்சன் உயிழந்தார்.

Advertisement
இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF






Comments