திருச்சி மாவட்டம் துறையூரில் தெலுங்கு தேவாங்க சமூகத்தினர் இன்று ஆடி 18 முன்னிட்டு சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த திருவிழா மூன்று நாட்களாக நடைபெறும்.

இவ்விழாவில் சக்தி அழைத்தல், பன்னாரி அம்மன் அழைத்து வருதல், மாவிளக்கு பூஜை என திருவிழா கலை கட்டியது. மூங்கில் தெப்பக்குளத்தில் இருந்து சிவன் பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் வேடம் அணிந்து பண்ணாரி அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறியவர் முதல் மற்றும் பெரியவர் வரை தங்கள் உடல்களில் கத்தியை கீறி கொண்டு ஊர்வலமாக வந்தனர். பாலக்கரை பெரிய கடை வீதி உயர்நிலைப் பள்ளி சாலை மற்றும் ஆலமரம் வழியாக கோவில் சன்னிதானத்தை ஊர்வலம் வந்தடைந்தது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments