திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் காலனி காமதேனு நகரில் பூரண புஷ்களா சமேத தலைவெட்டி அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கியது.

தொடர்ந்து நான்காம் தேதி பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அய்யனாருக்கும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு நிகழ்வாக நேற்று மருளாளிக்கு சாமி வரவழைக்கப்பட்டு குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அரிவாள் மீது ஏறி மருளாளி பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார்.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments