Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் ஆம் ஆத்மி தன்னார்வலர்கள் கூட்டம்: தமிழக அரசியலில் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பாக திருச்சியில் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் இளங்கோ அவர்கள் தலைமையில் தன்னார்வலர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் அன்புத்தம்பி தமிழகத்தின் புதிய மேலிட பொறுப்பாளர் பங்கஜ் சிங் அவர்கள் கலந்து கொண்டு விருந்தினராக சிறப்பித்தார்கள்.

மாநிலத் தலைவர் வசீகரன், மாவட்ட மகளிர் அணி தலைவி வழக்கறிஞர் அகிலா மண்டல மாவட்ட மாநில நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டார்கள். டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் எதிர்வரும் தமிழக 2026 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மீ கட்சி போட்டியிட ஏதுவாக கள நிலவரம் காண தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் உண்மை நிலை, கட்டமைப்பை கண்டறிய ஆணையிட்டதன் பேரில் பங்கஜ் சிங்
தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

நேற்று திருச்சி மாவட்ட கூட்டத்தில் பங்கஜ் சிங் கூறியது பின்வருமாறு. டெல்லியில் இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம், பொதுமக்களுக்கு சுத்தமான இலவச குடிநீர் மற்றும் ஏனைய பல நல்ல கட்டமைப்புகளை செய்து கொடுத்துள்ளோம். ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக பல கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை மக்கள் கண் முன்னே செயல்படுத்தி காட்டி உள்ளோம்.

தற்போதைய தமிழக அரசு எங்கள் டெல்லி கெஜ்ரிவால் மாடல் ஆட்சியை பள்ளி கட்டமைப்பு மற்றும் பிங்க் பேருந்து உட்பட சில நல்லவைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளது.
திருச்சியில் காவிரி மற்றும் உய்ய கொண்டான் ஆறுகள் மாசு பட்டதை சரி செய்து கழிவுநீர் கலக்காமல், அதை தூய்மைப்படுத்த வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரமும் நீர் வழி வளம் பெருக காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். பள்ளி மாணவ மாணவியர் இடத்தில் போதைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சிகளில் மாநகராட்சி மேயர் தேர்வு முறை மீண்டும் ஒவ்வொரு வாக்காளர் குடிமகனால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே தவிர மாமன்ற உறுப்பினர்களால் அல்ல எனவும் அவ்வாறு செய்வது குதிரை பேரம் போன்ற நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அது குறித்து திருச்சி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியில் உரிய நடவடிக்கை எடுக்க போவதாகவும் கூறினார்.

திருச்சி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி நல்ல வளர்ச்சி, கட்டமைப்புடன் இருப்பதாகவும் மாவட்ட தலைவர்,மாவட்ட மகளிர் அணி தலைவி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். திருச்சியின் தன்னார்வலர்கள் கட்டமைப்பை பார்க்கும் போது தனக்கு குடும்ப உறவு போன்றும் குடும்ப சொந்த பந்தங்கள் போன்று உணர்வதாக பெருமிதத்துடன் கூறினார். இந்த கட்டமைப்பு தான் உண்மையான உண்மையான தொண்டர்கள், தன்னார்வலர்கள் என்பதை தான் உணர்வதாகவும் அதை கண்முன்னே கண்டு கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இவர் டெல்லி சென்று கொடுக்கும் உண்மையான அறிக்கையின் அடிப்படையிலேயே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுமா? என்பது குறித்து டெல்லி தலைமை முடிவு செய்யும் என நம்பப்படுகிறது. கூட்டத்தில் மாநில தலைவர் வசீகரன், மாநில செயலாளர், மகளிர் அணி செயலாளர் உட்பட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தமிழக அரசியலில் திருச்சி என்றாலே திருப்புமுனை என்று உள்ள சூழலில் பங்கஜ சிங் அவர்களின் இந்த சூறாவளி சுற்றுப்பயணம் தமிழக அரசியலில் ஒரு பரபரப்போடு அனைத்து கட்சிகளாலும் கூர்மையாக உற்று நோக்கப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *