எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 73) திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு சுமையுடன் சாலையில் நடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த கனரக வாகனம் கிரேன் வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து நடந்த தருணத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திருச்சி காந்தி மார்க்கெட் சாலையில், குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து, உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments