திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை அடுத்த முதலியார் சத்திரம் பகுதியில் சிமெண்ட் கட்டிடத்தில் அரசு நியாய விலை கடை ஒன்று இயங்கிவருகிறது.
தற்போது நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தைகாட்டிலும் அதிகரித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் கடந்த சிலநாட்களாக ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் தொகுப்புக்கான டோக்களையும், பொங்கல் தொகுப்பையும் பெற்றுச்செல்கின்றனர்.
கடந்த இரண்டு தினங்களாக திருச்சியில் பெய்து வரும் மழையின் காரணமாக முதலியார் சத்திரம் ரேஷன் கடையின் சிமெண்ட் கட்டிடம்
மழைநீரிஊறி கட்டிடத்தின் மேற்பூச்சு நேற்று இரவு பெயர்ந்து விழுந்தது.
இன்று காலை நியாய விலைக் கடை ஊழியர்கள் கடையை திறந்துபார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
இரவு நேரத்தில் நடந்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments