Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கணக்கு நிர்வாக பணி பயிற்சி- ஆட்சியர் தகவல்

  தாட்கோ மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் வங்கி நிதிதுறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய ஏதுவாக கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
 தமிழ்நாடு ஆசிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.
 தற்போது பெருகி வரும் வேலைவாய்ப்பு சதவீதம், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வேலைவாய்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் தாட்கோ நிறுவமானது புகழ்பெற்ற தனியார் வங்கியுடன் இணைந்து கணக்கு தீர்வாக (Accounts Executive) பணிக்கான பயிற்சியை வழங்க உள்ளது.
 இப்ப பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சார்த்தவர்கள் ஏதேனும் ஒரு படிப்பு Such as BA.com and BSc-Maths படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

 இப்பயிற்சிக்கான கால அளவு 20 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொள்ளப்படும். இப்ப பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கு அனுமதிக்கப்படும்
 இத்தேர்வுவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாங்கி நிதி சேவை காப்பீடு BFSI (Banking Financial Service insurance-ல் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக (Account Executive) பணியில் சேர பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும்.

விண்ணப்ப விபரம்:

இப்பணியில் ஆரம்ப கால சம்பளமாக ரூ.25000/- முதல் ரூ.30000 வரை பெறலாம். இப்பயிற்சியினை தாட்கோ இணையதளமான WWW.tahdco.comஎன்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்பத்தில் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

        
#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *