திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அதவத்தூரை சேர்ந்த 17 வயது பெண்ணை கரூர் மாவட்டம், காமராஜர் நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் 22/25, த.பெ. சக்திவேல், என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்.51/25, U/ 5(I)5(j)(ii) r/w 6 (1) of POCSO ACT ன் படி 25.10.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேற்படி எதிரியிடமிருந்து கைப்பற்றபட்ட செல்போனை சோதனை செய்ததில் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளது தெரிய வந்து விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீரங்கம் தாலுகா, பெருங்குடி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியிடமும் காதலிப்பதாக ஆசை வார்த்தைகூறி பழகி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாகவும் தெரிய வந்ததால், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மேற்படி எதிரி மீது ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 52/25, U/ 5(1), r/w 6(I) of POCSO Act ன் படி 28.10.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் குற்றவாளி முத்துகிருஷ்ணன் 22/25, த.பெ. சக்திவேல், காமராஜர் நகர், நங்கவரம், குளித்தலை தாலுகா, கரூர் மாவட்டம் என்பவர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 13.11.2025-ம் தேதி சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போது வரை மொத்தம் 101 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments