தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். டிஜிபி ரேங்கில் உள்ள அதிகாரி உட்பட தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
காவல்துறை பயிற்சிக்கல்லூரி ஐஜி தமிழ் சந்திரன் ஐபிஎஸ், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக இருந்த செந்தில் குமாரி ஐபிஎஸ், சென்னை குற்றப்பிரிவு காவல்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி எஸ்.பி சாம்சன் சென்னை போதைப்பொருள் தடுப்பு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். தென்காசி எஸ்.பியாக சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், கரூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 
நெல்லை மாநகர காவல் ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக, சிபிசிஐடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு போலீஸ் அகாடமி இணை இயக்குநர் ஐ.ஜி ஜோஷி குமார் ஐபிஎஸ், குடிமைப் பணிகள் சிஐடி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த சுந்தரவதனம், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த முன்னாள் தென் சென்னை இணை ஆணையர் திஷா மிட்டல், டெக்னிக்கல் சர்வீசஸ் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த தீபா சத்யன், சென்னை காவல்துறை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்றிரவு தமிழ்நாடு அரசு இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           79
79                           
 
 
 
 
 
 
 
 

 12 October, 2023
 12 October, 2023





 





 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments