Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆசிரியர்கள் சம்பளம் பாதியாக குறைப்பு குறித்து முதல்வர் அறிவுரைப்படி நடவடிக்கை. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மணப்பாறை அரசு மருத்துவமனை மற்றும் அரியமங்கலம் குப்பை கிடங்கை ஆய்வு செய்த பின்னர் தற்போது 80 சதவீத பணிகள்  நிறைவு பெற்றுள்ள புதிய சத்திர பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வரும். இங்கு, ஏற்கனவே கடைகள் வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அரியமங்கலம் குப்பை கிடங்கில் நாளொன்றுக்கு 1,500 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, உரமாக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஒரு ஆண்டில் குப்பைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு விடும். தற்போதைய சூழலில் குப்பை கிடங்கை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கான இடமும் இல்லை. வாட்ஸ் ஆப் மூலம் 100 சதவீதம் மாணவர்களையும் தொடர்பு கொள்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. பெரும்பாலான மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாத நிலை உள்ளது. இருப்பினும், மாணவர்கள் கல்வியில் இடைவெளி நேரக்கூடாது என்பதற்காக, யூனிட் டெஸ்ட் நடத்தப்பட உள்ளது.

புதிய கல்விக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் அமைச்சருக்கு அனுமதி கோரிய கடிதத்துக்கு, இதுவரை மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்றார். கொரோனா பொது முடக்கத்தால் பணி இல்லாமல் இருக்கும் ஆசிரியர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும், என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வருகிறதே என்று கேட்கப்பட்டது அதற்கு ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்து, முன்கள பணியாளர்களின் ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும், என்று எனக்கும் பள்ளிக்கல்வித் துறைக்கும் வாட்ஸ் அப் மூலம் அறிவுறுத்தல்கள் வருகின்றன. இதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவருடைய அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *