தமிழ் திரைப்படத்தின் முன்னணி கதாநாயகனாக நடிப்பவர் நடிகர் விக்ரம். இவர் கோயம்புத்தூரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திருச்சியில் ஒரு ஹோட்டலில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் கடைவீதியில் நடிகர் விக்ரமுக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. நடிகர் விக்ரம் காரின் நின்றபடியே ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வாழ்த்துக்களையும், பெற்றுக் கொண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் காரில் நின்று கொண்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் சாலையில் நின்று கொண்டு நடிகர் விக்ரமின் கண்டு ரசித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments